டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொதுவாக இந்த சமூகத்தில் பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதையும், அதனால் அவர்கள் படும் துன்பத்தை பற்றியும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. முதன் முறையாக ஒரு இளைஞன் பாலியல் தொழிலாளியாக்கப்படுவதை பற்றி புதுமையான படம் எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் பெயர் போத. மேல் பிராஸ்டியூசன் என அழைக்கப்படும் இந்த ஏரியா பற்றி வருகிற முதல் படம் இது என்கிறார் இயக்குனர் சுரேஷ்.ஜி. அவர் மேலும் கூறியதாவது:
பாலியல் தொழிலுக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. நம் நாட்டில் ஆண்கள் பாலியல் தொழிலுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
சினிமா வாய்ப்பு தேடி வரும் ஒரு இளைஞன், பாலியல் தொழிலுக்கு சென்று விட்டு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிற கதை. போதையிலேயே பெரிய போதை பணம் தான். பணத்தால் எதையும் செய்ய முடியும். ஆனால் பணத்தால் எல்லாவற்றையும் செய்து விட முடியாது என்பது தான் படம் சொல்லும் மெசேஜ் என்கிறார் சுரேஷ்.ஜி.
இதில் புதுமுகம் விக்கி ஹீரோவாக நடிக்கிறார். படத்தில் ஹீரோயின் கிடையாது. சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார், பிப்டி பிப்டி பிலிம்ஸ், ஜி.வி.எஸ்.புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளன.