ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக நடிகை வரலட்சுமி வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது விஷாலின் சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்து வருகிறார். இதுதவிர வெல்வெட் நகரம், நீயா 2, விஜய்யின் சர்கார் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அடுத்தப்படியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் படம்.
இதில் வரலட்சுமி, கண்பார்வையற்றவராக நடிக்கிறார். ஜேகே என்பவர் இயக்குகிறார். சாய் சமரத் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(ஜூலை 5) ஆரம்பமானது.
ராஜபார்வை என்ற படத்தில் கமல், பார்வையற்றவராக நடித்திருந்தார். கிட்டத்தட்ட அதுபோன்றதொரு கேரக்டரில் வரலட்சுமி நடிப்பதாக தெரிகிறது.