டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தன்னுடைய முதல் படமான 'போடா போடி'யில் தொடங்கி, 'என்னை அறிந்தால்', 'மாரி', 'நானும் ரெளடி தான்', 'ரெமோ', 'விக்ரம் வேதா', 'தானா சேர்ந்த கூட்டம்', 'இரும்புத்திரை' என பல படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். சில மியூஸிக் ஆல்பத்துக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், தரண் குமார், அனிருத், யுவன் சங்கர் ராஜா, சாம் சி.எஸ்., என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியுள்ள விக்னேஷ் சிவன், அனிருத் இசையில் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' படத்தில் பாடகராகவும் அறிமுகமாகிறார் விக்னேஷ் சிவன். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை நாளை வெளியாகிறது.