இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் நகைச்சுவை நடிகையாக இருப்பவர் வித்யுலேகா ராமன். இவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருப்பவர். டுவிட்டரில் 2.1 லட்சம் தொடர்பாளர்களுடனும், பேஸ்புக்கில் 4.5 லட்சம் தொடர்பாளர்களுடனும் இருக்கிறார்.
இவருடைய பேஸ்புக் கணக்கை நேற்று யாரோ ஹேக் செய்து அதை 'ரம்யா' என்பவரின் கணக்காக மாற்றி உள்ளார்கள். அதில் சில நடிகைகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்கள். இது பற்றி வித்யுலேகா டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,
“வினோதமான, வித்தியாசமான, பயங்கரமான ஒன்று நடந்துள்ளது. என்னுடைய வித்யு ராமன் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, கடத்தப்பட்டு, திருடப்பட்டுள்ளது. என்னுடைய 450000 தொடர்பாளர்கள் இருக்கும் அந்தப் பக்கம் ஒரு நடிகையின் பக்கமாக மாற்றப்பட்டுள்ளது. என்னைத் தவிர என் பக்கத்தை யாரும் நிர்வகிக்கவில்லை. இது எப்படி நடந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அந்தக் குற்றவாளியைப் பிடிக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.