'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கடந்த ஆண்டு வெளியான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே உமாபதிக்கு அடுத்தப்பட வாய்ப்பு தேடி வரவில்லை.
இந்நிலையில் தன்னுடைய மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து தம்பிராமையாவே 'மணியார் குடும்பம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். தம்பி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள மணியார் குடும்பம் படம் திரைக்கு வருவதற்கு முன்பே மற்றுமொரு படத்தில் நடிக்க உமாபதி ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தை சேரன் இயக்கவிருக்கிறார். இந்த தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸாகவே போட்டிருக்கிறார் சேரன். இந்தப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை 13-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.