'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசிக்கப்போவதாக அறிவித்தவர், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கினார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தனது 165வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவரது மனைவியான லதா ரஜினி, மகாராஷ்டிரா சென்றபோது, மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மனைவி சார்மிளாவை சந்தித்து பேசியுள்ளார்.
அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை லதா ரஜினியுடன் பேசியதாக ராஜ் தாக்கரே டுவிட்டரில் போட்டோவுடன் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், பாஜகவை ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், லதா ரஜினி அவரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.