Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராமதாஸ் எதிர்ப்பு : பணிவாரா விஜய்?

03 ஜூலை, 2018 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay-will-delete-cigarette-smoking-in-Sarkar?

சிகரெட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி அதை பிரபலப்படுத்துவது போல நடிகர் விஜய்யின் புதிய படமான சர்கார் படத்துக்கான பர்ஸ்ட் லுக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை, பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.

இதன் பின்னும் இந்த சர்ச்சை குறித்து, நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் கண்டு கொள்ளாமல் இருப்பது, பா.ம.க., நிறுவனர் ராமதாஸை எரிச்சல்படுத்தி இருக்கிறதாம்.

ஏற்கனவே ரஜினி படம் ஒன்றுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்வதற்கு கடும் நெருக்கடி கொடுத்ததைப் போல, சர்கார் படத்துக்கும் நெருக்கடி கொடுப்பது குறித்து, ராமதாஸ் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்திருக்கும் நடிகர் விஜய் தரப்பு, சர்கார் படத்தில் வரும் சிகரெட் காட்சிகளை முழுமையாக நீக்கிவிடுவது குறித்து, தயாரிப்பாளர் தரப்பில் பேசி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, படத்தில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய
கமலுக்கு விஜய் நன்றிகமலுக்கு விஜய் நன்றி தயாரிப்பாளர் கில்டில் மீண்டும் மோதல்: தலைவர் மீது போலீசில் புகார் தயாரிப்பாளர் கில்டில் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (31)

mohan - chennai,இந்தியா
05 ஜூலை, 2018 - 14:50 Report Abuse
mohan மெர்சல் ஒரு குப்பை படம் அதில் GST பற்றி ஒரு வசனத்தை சொல்லியதற்காக BJP எதிர்ப்பு கிளம்பியதால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இல்லனா அந்தப்படம் படு தோல்வி அடைத்திருக்கும் இப்ப சர்க்கார் அதேவழி நன்றி PMK /பிஜேபி
Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
04 ஜூலை, 2018 - 12:40 Report Abuse
Gokul Krishnan பா ம க வின் குரு சமீபத்தில் இயற்கை மரணம் அடைந்த பின் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கினார்கள் , அதை பற்றி ராமதாஸ் அவர்கள் கருது தெரிவித்தால் நன்றாக இருக்கும், அடுத்தவரை ஒரு விரல் காட்டி குற்றம் சொல்லும் பொது , மூன்று விரல்கள் நம்மை தான் காட்டுகிறது என்பதாய் ராமதாஸ் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்
Rate this:
mohan - chennai,இந்தியா
04 ஜூலை, 2018 - 12:23 Report Abuse
mohan இப்படி எதிர்ப்பு தெரிவித்தே மெர்சல் / காலா போன்ற குப்பை படத்தை ஹிட் செய்துவிடுங்கள் அன்புமணி இதெல்லாம் வியாபார தந்திரம் ?
Rate this:
Rajan - singapore,சிங்கப்பூர்
04 ஜூலை, 2018 - 10:41 Report Abuse
Rajan அந்த படத்தில் நல்ல விஷத்தை அப்படியே மக்கள் பின்பற்றுகிறார்களா
Rate this:
04 ஜூலை, 2018 - 10:06 Report Abuse
தமிழ் இப்படியே சொல்லி படத்தை நீங்களே இலவசமாக பிரபலமாகி விடுங்கள்... மெர்சல் போன்று.. அதை தான் அவர்களும் எதிர் பார்கின்றார்கள்.
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in