இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக நடித்து வரும் அவர், தமிழில் சரியான பட வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார்.
இப்போதுவரை கவர்ச்சி விசயத்தில் எல்லை தாண்டாமல் நடித்து வரும் அனுபமா, நடிப்பைப் பொறுத்தவரை சமந்தா, கீர்த்தி சுரேஷை தான் பின்பற்றுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருமே வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். அதனால் நானும் அவர்களைப்போன்று அழுத்தமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்.
மேலும், சமந்தா நடித்து வெளியான ரங்கஸ்தலம் படத்தில் அவர் நடித்த ராமலட்சுமி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குத்தான் வந்தது. ஆனால் அப்போது நான் பிசியாக இருந்தால் கால்சீட் பிரச்சினையினால் அந்த படம் நழுவிப்போய் விட்டது. இருப்பினும், சமந்தா ரேஞ்சுக்கு அந்த ராம ட்சுமி வேடத்தில் என்னால் நடித்திருக்க முடியுமா என்றால் அது சந்தேகம்தான் என்றும் தெரிவித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.