ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மைனா படத்திற்கு பிறகு முன்னணி நடிகராகி விட்டர்ர. தம்பி ராமைய்யா. காமெடி, குணசித்ர வேடம் என்று பிசியான நடிகராகி விட்டார் அவர். இந்த நேரத்தில் அவர் மகன் உமாபதி நாயகனாக நடித்து வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படம் வெற்றி பெறவில்லை. அதையடுத்து நடித்த இன்னொரு படமும் கிடப்பில் கிடக்கிறது.
அதனால் உமாபதிக்கு புதிய படவாய்ப்புகள் வராததால், அவரை வைத்து தற்போது மணியார் குடும்பம் என்ற படத்தை தானே இயக்கியிருக்கிறார் தம்பி ராமைய்யா. ஏற்கனவே மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் போன்ற படங்களை இயக்கியிருக்கும் அவர் இந்த படத்தை பேமிலி செண்டிமென்ட் கலந்த காமெடி கதையில் இயக்கியிருக்கிறார்.
அதோடு, தம்பி ராமைய்யா, ஒரு வில்லுப்பாட்டு கலைஞராம். மேடையில் அமர்ந்து 2 மணி நேரம் வில்லுப்பாட்டு இசைக்கும் அசாத்திய திறமை கொண்டவராம். அந்த இசைத்திறமை தனக்குள் இருந்த தினால்தான் இந்த மணியார் குடும்பம் படத்தில் அவர் இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளாராம்.