கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, சஞ்சு என்ற பெயரில் படமாக தயாராகி உள்ளது. சஞ்சய் தத்தின் இளமை காதல், சினிமா பயணம், போதை பழக்கத்திற்கு அடிமையானது, ஆயுதம் கடத்திய வழக்கு, சிறைவாசம் உள்ளிட்ட அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்தப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், பிகே படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர், டிரைலர் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றன. குறிப்பாக ரன்பீர், சஞ்சய் தத் போன்றே வாழ்ந்திருக்கிறார் என டிரைலரில் பாராட்டை பெற்றார்.
இந்நிலையில் இப்படம் நேற்று ரிலீஸானது. எதிர்பார்ப்பை போலவே சஞ்சு படத்திற்கு அமோக அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்திருக்கிறது. இப்படம் இந்தியாவில் மட்டும் முதல்நாளில் ரூ.32 முதல் 34 கோடி வசூலித்திருப்பதாகவும், உலகம் முழுக்க ரூ.50 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
2018-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களிலேயே, சஞ்சு படம் தான் முதல்நாள் வசூலில் நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.