சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து, சர்ச்சைகளை கடந்து 2013-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகம், நான்கு ஆண்டுகள் கழித்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.
கமலுடன் முதல்பாகத்தில் நடித்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் இந்தப்படத்திலும் தொடருகின்றனர். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. "நானாகிய நதிமூலமே..." என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலை கமலே, எழுதி, பாடியிருக்கிறார். கமலுடன், கவுசுகி சக்ரபார்த்தி மற்றும் மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர் ஆகியோரும் இணைந்து பாடியிருக்கின்றனர்.
விஸ்வரூபம் 2-வில் கமலின் அம்மாவாக பிரபல ஹிந்தி நடிகை வகிதா ரஹ்மான் நடித்திருக்கிறார். தாய்மையை போற்றும் விதத்தில் இந்தப்பாடல் அமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகிறது.
Happy to share #Naanagiya song from #Vishwaroopam2
Hope you like it https://t.co/KNqZQfxfHD@ikamalhaasan @shrutihaasan @RKFI @PoojaKumarNY @andrea_jeremiah @shekharkapur @RajeshMSelva @kunal_rajan @TSeries @RahulBose1 @kunal_rajan @Singer_kaushiki @ananthmahadevan
— Ghibran (@GhibranOfficial) June 29, 2018