ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விமல் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் 'களவாணி'. இந்தப் படத்தின் மூலம் தான் சற்குணம் இயக்குநராக அறிமுகமானவர். இதில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஹிட்டான 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது, உருவாகி வருகிறது.
தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கும் இதற்கு 'K2' என டைட்டில் வைத்துள்ளார் சற்குணம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தகவலை இயக்குநர் சற்குணமே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் கே-2 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் களவாணி படத்தின் தயாரிப்பாளரான நசீர், களவாணி- 2 என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மந்தமாக நடைபெற்றுவரும் நிலையில், கே-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் சீக்கிரமே திரைக்கு வர வாய்ப்புள்ளது.
கே-2 படத்தை அனைவருமே களவாணி 2 என்று அழைப்பதால் களவாணி- 2 டைட்டிலுக்கு சொந்தக்காரரான நசீர் அதிருப்தியில் இருக்கிறாராம்.