இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
நீட் தேர்வை எதிர்த்து போராடி தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற படம் உருவாகிறது. ரன்ஹோர்ஸ் நிறுவனம் சார்பில் அஜய் மற்றும் ஆர்.ஜே.மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தினா இசை அமைக்கிறார், செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். அஜய் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. படம் பற்றி இயக்குனர் அஜய் கூறியதாவது:
இந்த படத்தில் நாயகியாக ஜூலியை நடிக்க வைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மிரட்டவும் செய்தார்கள். அதையும் மீறித்தான் ஜூலி இதில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை பார்த்தபிறகு அவர்கள் கூறியது தவறு என்று உணர்வார்கள். வணிக ரீதியான வெற்றிக்காவோ, பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை இயக்கவில்லை.
மருத்துவ படிப்பு படிக்க முழு தகுதி இருந்தும் நம் கல்வி முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வுமுறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்ற நோக்கமே காரணம். இத்திரைப்படம் தேசிய விருதை கண்டிப்பாக வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்கிறார் இயக்குனர் அஜய்.