ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்தும், சூர்யாவும் இணைகிறார்கள் அல்லவா.? இந்தப்படத்தில் பட்ஜெட்டில் மட்டும் பிரமாண்டம் காட்டாமல் நட்சத்திர தேர்விலும் பிரமாண்டம் காட்டும் விதமாக பல மொழிகளில் இருந்தும் முக்கிய நடிகர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் மலையாளத்தில் இருந்து நடிகர் மோகன்லால், தெலுங்கில் இருந்து அல்லு சிரிஷ் ஆகியோர் ஏற்கனவே இந்தப்படத்தில் இணைந்துவிட்டனர்.
தற்போது இந்தப்படத்தில் புதிய வரவாக பாலிவுட் குணசித்திர நடிகர் போமன் இரானியும் இணைந்துள்ளார். 3 இடியட்ஸ் படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக கலக்கிய போமன் இரானி நம் தமிழ் ரசிகர்களையும் வசீகரிப்பார் என்பதில் சந்தேகமில்லை.