'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை ஊர்வசியின் அக்கா நடிகை கல்பனா. அழகான பெண்கள் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை மாற்றி தனது குண்டு உடம்பையே தனது பிளஸ்சாக்கி 100-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தவர்.
தமிழில் சின்ன வீடு படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு திருமதி ஒரு வெகுமதி, சதி லீலாவதி, மூக்குத்து பூமேலே, சிந்து நதிப்பூ, டும் டும் டும், பம்மல் கே.சம்பந்தம், அற்புத தீவு, தோழா, காதல் கசக்குதய்யா உள்பட பல படங்களில் நடித்தார். அவர் கடைசியாக நடித்தது இட்லி என்ற தமிழ் படத்தில். இந்தப் படம் அவர் மறைந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜூன் 29-ல் வெளிவருகிறது.
இதனை வித்யாதரன் இயக்கி உள்ளார். கல்பனாவுடன் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மனோபாலா, லொள்ளுசபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். தரன் இசை அமைத்துள்ளார், கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பு மூவீஸ் சார்பில் பாபு தூயவன் தயாரித்துள்ளார்.
நடுத்தர வயதைத் தாண்டிய 3 பெண்களான கல்பனா, கோவை சரளா, சரண்யா ஆகியோர் ஒரு வங்கியை திட்டமிட்டு கொள்ளை அடிப்பது மாதிரியான காமெடி கதை.