மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் விக்கி. இவர், இயக்கியுள்ள படம் 'டிராபிக் ராமசாமி'. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழக்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரோகிணி நடித்துள்ளார். இந்த படத்திற்கு, 'ஹர ஹர மாகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களுக்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார்.
'டிராபிக் ராமசாமி' படத்தை 'கிரீன் சிக்னல்' என்ற படநிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் டைட்டிலில் டைரக்ஷ்ன் மேற்பார்வை என தன்னுடைய பெயரை போட்டுக்கொள்ள நினைத்தாராம் எஸ்.ஏ.சி. விக்கியின் அசராத உழைப்பைப் பார்த்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம்.