600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் வெளியான படம் இரும்புத்திரை. இந்த படம் அபிமன்யுடு என்ற பெயரில் கடந்த 1ந் தேதி தெலுங்கில் வெளியானது. தமிழைப் போலவே தெலுங்கில் நல்ல வசூல் சாதனை புரிந்து வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு, அபிமன்யுடு படத்தைப்பார்த்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அபிமன்யுடு படத்தை பார்த்து வியந்தேன். பி.எஸ்.மித்ரன் அறிவுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். விஷால் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.