Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சினிமா வாய்ப்பு தேடி அலைந்தது இல்லை : நிவேதா பெத்துராஜ்

15 ஜூன், 2018 - 00:32 IST
எழுத்தின் அளவு:
The-cinema-is-not-in-search-of-opportunity!

நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் படங்களை தொடர்ந்து, டிக் டிக் டிக், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து:

சினிமாவுக்கு வந்தது எப்படி?
நான் பிறந்தது மதுரை; 14 ஆண்டுகள் துபாயில் தான் வளர்ந்தேன். அழகி போட்டியில் பங்கேற்ற என்னை பார்த்த, இயக்குனர் நெல்சன்,ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்க அழைத்தார். ஒரு அனுபவத்திற்காக நடிக்கலாமே என்று தான், சம்மதித்தேன். இரண்டு, மூன்று படங்கள் நடித்து விட்டு போகலாம் என இருந்தேன். ஆனால், தொடர்ந்து வாய்ப்பு வந்ததால், இப்போது எட்டாவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

முதல் படத்திற்கு பின் அதிக இடைவேளை ஏன்?
ஒரு நாள் கூத்து படம் நடிக்கும் போதே, அடுத்து, நல்ல படம் வரும் என நினைத்தேன். அதற்காக காத்திருந்தேன். முதல் படம் நடித்து விட்டு, துபாய் சென்று விட்டேன். அதற்கு பின் தான், பொதுவாக என் மனசு தங்கம் பட வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கிலும் நடிக்கிறீர்களே...?
பொதுவாக என்மனசு தங்கம் படத்தை பார்த்து, தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கும் சில படங்களில் நடிக்கிறேன். கால்ஷீட் பிரச்னையால், ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க முடியாமல் போய் விட்டது.

தமிழ் சினிமாவில் உங்கள் அடுத்த திட்டம்?
சினிமாவில், எனக்கு எந்த லட்சியமும் இல்லை. எது வருகிறதோ, அதை தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருக்கிறேன். யோகாவில் ஆர்வம் உள்ளது. இயக்குனராகவும் ஆசை உள்ளது. அதற்காக நிறைய விஷயங்களை பார்த்து, தெரிந்து வருகிறேன்.

டிக் டிக் டிக் படம் பற்றி...?

சுவாதி என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் செட்டிற்குள் போகும் போதே, ஹாலிவுட் செட்டிற்குள் போனது போல் இருந்தது. சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய புது விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இந்த படத்தில், எனக்கு சண்டை காட்சிகள் உள்ளன.

* மாடலிங் துறையில் மறக்க முடியாத அனுபவம்?
அரபிக் மேக்கப் வித்தியாசமாக இருக்கும். அவர்களின் மாடலாக, என் முகத்தை மேக்கப்க்கு அவர்களிடம் கொடுத்து விட்டு 3,4 மணி நேரம் கூட நான் உட்கார்ந்த அனுபவம் இருக்கிறது. துபாயில் பல விளம்பரங்கள் அங்கே செய்துள்ளேன். நல்ல அனுபவம் உள்ளது.

* மதுரைக்கு போவது உண்டா?
உறவினர்கள் பலரும் மதுரையில் உள்ளனர். அங்கே கோயிலும் உள்ளதால் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மதுரை சென்று வருவது உண்டு.

* சென்னையில் எப்போது செட்டில் ஆவீங்க?
இப்போது சென்னையில் வீடு எடுத்து தங்கி இருக்கிறேன். தம்பி, சித்தி உடன் இருக்கிறார்கள். தம்பிக்கும் சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. எனக்கு இப்போது தொடர்ந்து படங்கள் உள்ளது. எப்போது வேலை இல்லாமல் போகிறதோ அப்போது துபாய் போய் விடுவேன்

* கைவசம் உள்ள படங்கள்?

வெளிவர உள்ள படம் டிக்டிக்டிக். சூட்டிங் போகும் படங்கள் திமிரு பிடிச்சவன், துல்கர் சல்மானுடன் ஒரு படம், பிரபுதேவாவுடன் காக்கி

* சென்னையில் பிடித்த உணவு?
எனக்கு மீன் வகை உணவுகள் ரொம்ப பிடிக்கும். நானே சமைப்பேன் .மீன் பிரியாணி கூட செய்திருக்கேன். அப்பா எனது உணவை விரும்பி சாப்பிடுவார்.

* இயக்குநர் ஆசை?
என்னால் வெறுமனே வேலை இல்லாமல் இருக்க முடியாது. எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். சில வருஷமாக கதை பற்றி சிந்தித்து ஒரு லைன் முடிவு செய்துள்ளேன். படப்பிடிப்பு சமயத்தில் கூட மானிட்டர் முன்னாடி தான் நான் எப்போதும் உட்காருவேன். இயக்குநர் எப்படி ஷாட் வைக்கிறார் கட் சொல்கிறார் என்றெல்லாம் கவனித்து பார்ப்பேன். 3,4 வருடங்களில் இயக்குநர் ஆக ஆசை. பார்ப்போம்

* சினிமாவில் போட்டி நிறைய உள்ளதா?
நடிப்பதற்காக, யாரிடமும் சென்று, வாய்ப்பு கேட்டது இல்லை. இதை பெருமையாகவே கூறுகிறேன். இங்கே வேலை இல்லை என்றால், துபாய் சென்று விடுவேன். நான் உண்டு, என் வேலை உண்டு என இருக்கிறேன். அதனால் தான், எனக்கு அடுத்தடுத்த வாய்புகள் வருகின்றன.

* உங்கள் ஸ்பெஷல் என்ன?
நன்றாக பெயின்டிங் செய்வேன். அதில், எனக்கு ஈடுபாடு அதிகம். கண்காட்சி வைக்க வேண்டும் என நண்பர்கள் கூறியுள்ளனர்; அதற்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும். டிரைவிங் செய்வது பிடிக்கும்.ஆனால், சென்னையில், 60 கி.மீ.,க்கு மேல், செல்ல முடிவதில்லை. கார் பந்தயத்தில் போட்டியிட்டு, தோற்ற, ஜெயித்த அனுபவமும் உண்டு. இதெல்லாம் செய்யவில்லை என்றால், வாழ்க்கையில் என்ன இருக்கிறது. சவால், எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்தில், பயமும் உண்டு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சென்னை மக்கள் அன்பானவர்கள் : ஷாலினி பாண்டேசென்னை மக்கள் அன்பானவர்கள் : ஷாலினி ... அவசியம் என்றால் கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை!: சாந்தினி அவசியம் என்றால் கவர்ச்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in