விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாலிவுட்டில், நாளுக்கு நாள், புதுமுகங்களின் படையெடுப்பு அதிகரித்தாலும், ரசிகர்களின் கனவு தேவதை, கத்ரீனாவுக்கான மவுசு, சற்றும் குறையவில்லை. கான் நடிகர்களின் படம் என்றால், அதில்,கத்ரீனாவின் இருப்பு, தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது.
ஷாரூக்கான் ஜோடியாக, ஜீரோ என்ற படத்திலும், அமீர் கான் ஜோடியாக ஒரு புதுப் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே, சல்மான் கானுடன் சேர்ந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு, கலை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனாக் ஷி சின்கா போன்ற நடிகையரும், இந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும்,
அதிகபட்சமாக, கத்ரீனாவுக்கு தான், 12 கோடி ரூபாய், சம்பளம்தரப்பட்டுள்ளது.
'பாலிவுட்டை பொருத்தவரை, தீபிகா, பிரியங்கா போன்ற நடிகையர் இருந்தாலும், கத்ரீனா தான், ரசிகர்களின் மனம் கவர்ந்தமகாராணி' என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.