தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில ஆண்டுகளாகவே, ஜீவாவுக்கு, சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் இல்லை. ஏதாவது வித்தியாசமான படங்களில் நடித்தால் மட்டுமே, தாக்குப்பிடிக்க முடியும் என்பதை உணர்ந்த அவர், தற்போது அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அடுத்ததாக, ஜிப்சி என்ற படத்தில் நடிக்கிறார். நா டோடிகளைப் பற்றிய கதையாம் இது. இந்த கேரக்டருக்காக, முடியை நீளமாக வளர்த்துள்ளார். படத்தின், 'பர்ஸ்ட் லுக்' சமீபத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளதால், உற்சாகமடைந்துள்ளார், ஜீவா. 'கண்டிப்பாக, மீண்டும் முன் வரிசைக்கு வருவேன்' என, நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.