விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
மலையாள திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும் இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் பிரியதர்ஷன், சித்திக் ஆகியோரை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் ஹிந்தியில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர், டைரக்சனில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி கதாநாயகனாக நடிக்க ரிஷி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை வேதிகா நடிக்கிறார். இது ஒரு ஹாலிவுட் த்ரில்லரின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பை 45 நாட்களில் ஒரேகட்ட படப்பிடிப்பாக நடத்த திட்டமிட்ட ஜீத்து ஜோசப், தற்போது படப்படிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். குறுகியகால தயாரிப்பாக இந்தப்படம் உருவாகி வருகிறது.