அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
மாதவனும், ஷ்ரதா ஸ்ரீநாத்தும் 'விக்ரம் வேதா' படத்தில் இணைந்து நடித்தனர். 'விக்ரம் வேதா' படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
'கல்கி' என்ற குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் என்ற அறிமுக இயக்குநர் இந்த படத்தை இயக்குகிறார். ரொமாண்டிக் டிராமாவாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு 'மாறா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' மற்றும் இப்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வசனம் எழுதிய நீலன் இப்படத்துக்கு வசனம் எழுதுகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
விக்ரம் வேதா படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சற்குணம் இயக்கும் படத்துக்கு முன்னதாக மாறா படத்தில் மாதவன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.