திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
'காதலும் கடந்துபோகும்', 'கவன், 'பவர் பாண்டி' ஆகிய படங்களில் நடித்தும் மடோனா செபஸ்டியனுக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை! கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 'ஜுங்கா' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
'ஜுங்கா' விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் மடோனா செபாஸ்டியனுக்கு கன்னடப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் 'கொடிகோபா-3' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார் மடோனா செபாஸ்டியன்.
ஏற்கெனவே மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்துள்ளார் மடோனா செபாஸ்டியன். இதுவரை கன்னடப்படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்தார். 'கொடிகோபா-3' கன்னட படத்தில் நடிப்பதன் மூலம் நான்குமொழிகளில் நடித்த நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மடோனா செபாஸ்டியன்.