ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவை நோக்கி மலையாள நடிகைகள், மும்பை நடிகைகள் அதன்பிறகு குஜராத், பம்பாய் என நடிகைகள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் அந்த டிரண்ட் இப்போது குறைந்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குடும்பங்களை சேர்ந்த மாடல் அழகிகள், அங்கு நடக்கும் அழகி போட்டிகளில் வென்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறார் ஆஷிமா நெர்வால்.
ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவரான இவர் அங்கு நடந்த மிஸ்.இந்தியா, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ்.சிட்னி போட்டிகளில் பங்கேற்று டைட்டில்களைப் பெற்று விட்டு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் கொலைகாரன் படத்தில் அவர்தான் ஹீரோயின். இதில் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது.
ஆஷிமா நெர்வால் குடும்பத்தினருடன் கிளம்பி வந்து தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். புதுமுக இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்குகிறார். "எளிமையான தமிழ் முகச்சாயல் கொண்டிருப்பதால் தான் அவரை தேர்வு செய்தோம். கொலைகாரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்" என்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ்.