'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தித் திரையுலகில் புதிய நடிகையாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நுழைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள். மராத்தியில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'சாய்ராட்' படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகியுள்ள 'தடக்' படத்தின் மூலம் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் டிரைலர் மூன்று நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. நேற்று வரை யு டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்த இந்தப் படத்தின் டிரைலருக்கு இதுவரை 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் கிடைத்துள்ளன. மூன்றே நாட்களில் இப்படி ஒரு வரவேற்பு இந்த டிரைலருக்குக் கிடைத்திருப்பது படக் குழுவினருக்கு கொண்டாட்டமாக உள்ளது.
ஹிந்தியில் முன்னணியில் உள்ள கான் ஹீரோக்களுக்குத்தான் இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது வழக்கம். அதே அளவிற்கு ஜான்வி கபூருக்கும், படத்தின் அறிமுக நாயகனான இஷானுக்கும் கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக இந்த வரவேற்பில் ஜான்விக்குத்தான் அதிக பங்குண்டு என்பதே உண்மை. டிரைலரில் மிகவும் அழகாக இருக்கிறார் ஜான்வி. அவருக்கும் இஷானுக்கும் ஜோடிப் பொருத்தம் அருமை என டிரைலரைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஜுலை 20ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.