சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் உலக அளவில் 2 பில்லியன் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏப்ரல் 27ம் தேதி வெளியான இந்தப் படம் இந்தியாவிலும் பெரிய வசூல் சாதனை படைத்தது. 48 நாட்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவதார் படம் இந்த சாதனையை 47 நாட்களில் படைத்துவிட்டது. ஒரே ஒரு நாளில் புதிய சாதனையை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் இழந்துவிட்டது.
அமெரிக்காவில் மட்டும் 656 மில்லியன் யுஎஸ் டாலரையும், வெளிநாடுகளில் 1.346 பில்லியன் யுஎஸ் டாலரையும் இப்படம் வசூலித்துள்ளது. 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ள படங்களில் தற்போது 4வது இடத்தை இந்தப் படம் பிடித்துள்ளது.
இதற்கு முன் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் அவதார் படம் 2.78 பில்லியன், டைட்டானிக் படம் 2.18 பில்லியன், ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேக்கன்ஸ் படம் 2.06 பில்லியன் வசூலித்துள்ளன. மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ஒரு படம் 20 பில்லியன் வசூலைத் தாண்டுவது இதுவே முதல் முறை.
2 பில்லியன் யுஎஸ் டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 13,534 கோடி. படத்தின் பட்ஜெட் சுமார் 2000 கோடி.