தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஆண்டு வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 8 தோட்டாக்கள். தற்போது இதே டீம் இணைந்து ஜிவி என்ற படத்தை உருவாக்குகிறது. 8 தோட்டாக்களை தயாரித்த பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரிக்கிறார். அதில் நடித்த வெற்றி இதிலும் ஹீரோவாக நடிக்கிறார்.
அஸ்வினி, மோனிகா என்ற இரு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர கருணாகரன், மைம்கோபி, ரோகினி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள். பாபு தமிழ், கதை வசனம் எழுதுகிறார், வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
இப்படம் விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை. சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது என்றார். இதன் படப்பிடிப்புகள் நேற்று துவங்கியது. இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.