சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ள படம் விஸ்வரூபம் 2. கமலே இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். கமலுடன் சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர்.
விஸ்வரூபம் 2 மூன்று மொழிகளில் தயாராகி உள்ளது. மூன்று மொழிக்கான டிரைலரும் வெளியானது. சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் மூன்று மொழி டிரைலரும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது....
விஸ்வரூபம் 2 டிரைலர் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு பிடித்ததை தான் ராஜ்கமல் பிலிம்ஸ் வழங்கும். விஸ்வரூபம் 2 தாமதத்திற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் காரணம் அல்ல. இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, அவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.
விஸ்வரூபம் 2, இந்தியா முழுக்க ரிலீஸாகிறது. உலகம் முழுதும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அமெரிக்காவில் ஒரு ஹாலிவுட் படம் எவ்வளவு தியேட்டர்களில் வெளியாகுமோ, அதற்கு நிகராக இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறோம். ஹாலிவுட்டிற்கு நிகராக இந்திய படம் வருவது பெரிய விஷயம். உலகமெங்கும் தமிழ் படங்களை பார்க்கும் நிலை வர வேண்டும்.
எனது சகோதரர் சந்திரஹாசன் என்னுள் இருப்பது போன்றும் தான் இப்போதும் உள்ளது. அவரின் இடத்தை நிரப்ப நிறைய சகோதரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதை அவரின் ஆசியாகவே கருதுகிறேன்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். அரசியல் என்ற பெயரில் இல்லாமல் வேறு ஒரு பெயரில் உருமாறி வந்த எதிர்ப்பு அது. ஒருவேளை விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால் அதை எதிர்கொள்ள ஒரு அரசியல்வாதியாக இப்போது நான் தயாராகிவிட்டேன்.
விஸ்வரூபம் 2 முதல்பாகத்தின் தொடர்ச்சி மட்டுமல்ல, அதற்கு முன் கதையும் உள்ளது. வைசாம் அகமது காஷ்மீரி எப்படி உருவானார் என்றும் இதில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் ஆக்ஷ்ன், உணர்வுகள் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கும்.
சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக்கி குழப்பி கொள்ள கூடாது. படம் வரும் போது படம், அரசியல் வரும் போது அரசியல்.
இவ்வாறு கமல் கூறினார்.
நாசர் : நெடுநாள் காத்திருப்பு இப்போது நிறைவேறியுள்ளது. இந்த காத்திருப்புக்கான பதில் விஸ்வரூபம் 2 படத்தில் தெரியும். ராஜ்கமலின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று என்னை கமல் சொன்னது பெருமை. படமும் விஸ்வரூபமாக இருக்கும் என நாசர் பேசினார்.
விஸ்வரூபம் 2, உலகம் முழுக்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது.