ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி தினேஷ் நடித்த 'திருடன் போலீஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். சூப்பர் நேச்சுரல் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அன்யா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.
'லெக்ஸ் டலியானிஸ்', 'கைதி பேண்ட்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்தவர் இவர். அன்யா சிங் நடிக்கும் முதல் தமிழ் படம் இது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கருணாகரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கு பதிப்பிலும் கருணாகரனே காமெடியனாக நடிக்கிறார்.