ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபுதேவா நடித்த மெர்குரி படம் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது அவர், "யங் மங் சங், லக்ஷ்மி, சார்லி சாப்ளின்-2" படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் காக்கி. இதில் அவர் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது உதவியாளர் முகில் இயக்குகிறார். நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். இயக்குனர் மகேந்திரன், நடிகர் சுரேஷ் மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்தப்படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் இப்போது பிசியான நடிகை. ஜெயம் ரவி ஜோடியாக டிக் டிக் டிக் படத்திலும், வெங்கட்பிரபு இயக்கி உள்ள பார்ட்டி படத்திலும் நடித்து முடித்துள்ளார். இது தவிர விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும், எழில் இயக்கும் ஜெகஜாலகில்லாடி படத்திலும் நடித்து வருகிறார். இப்போது பிரபுதேவா ஜோடியாக நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் காட்டில் அடைமழை பெய்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.