ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல் இயக்கி, நடித்த விஸ்வரூபம் படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து இந்தபடத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்து வந்தார் கமல். முதல்பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளே இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்தனர்.
இன்று மாலை 5 மணிக்கு விஸ்வரூபம்-2 டிரைலர் வெளியாகிறது. தமிழ் டிரைலரை ஸ்ருதிஹாசனும், தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்டிஆரும், ஹிந்தி டிரைலரை அமீர்கானும் வெளியிடுகிறார்கள்.
ஆகஸ்ட் மாதம், சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது அதிகாரப்பூர்வமாக படத்தின் ரிலீஸ் தேதியை கமல் அறிவித்துள்ளார். அதன்படி, படம் ஆகஸ்ட் 10-ம் தேதி மூன்று மொழிகளிலும் ரிலீஸாகிறது.