Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

களையிழக்கும் 'காலா', காரணம் என்ன ?

11 ஜூன், 2018 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Why-Kaala-not-impressed-people?

'காலா' படம் இமாலய வெற்றி, சாதனை வசூல், மக்களின் அமோக ஆதரவில், என படக்குழுவினர் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றனர். மற்றொரு பக்கம் டுவிட்டரில் சிலரை நியமித்து படம் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். படம் வெளிவரும் வரை எந்த ரசிகரையும் கண்டு கொள்ளாத இயக்குனர் பா.ரஞ்சித், படம் வெளிவந்த பின் யார் படத்தைப் பற்றி பாராட்டினாலும் அதை உடனே டுவிட்டரில் ரிடுவீட் செய்து வருகிறார்.

ஆனால், ரஜினிகாந்த் படங்கள் என்றாலே ஒரு வாரத்திற்கு ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு முடிந்திருக்கும். அது 'காலா' படத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கிறது. சென்னையில் மட்டும் படத்திற்கு நல்ல வசூல் என அதை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் சென்னையில் இன்றைய முன்பதிவு நிலவரத்தைப் பார்த்தால் இரண்டு வரிசை டிக்கெட்டுகள் மட்டுமே பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல வெளியூர்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே 'காலா' படத்தைப் பார்க்க வரும் கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள். 'காலா' படத்தைக் குடும்பத்துடன் பார்க்க வருபவர்களை விட 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தைக் குடும்பத்துடன் பார்க்க வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனத் தகவல் வருகிறது.

பா.ரஞ்சித் தொடர்ந்து சாதி ரீதியிலான படத்தை எடுப்பதும், 'காலா' படத்தில் இந்து கடவுள்களை காரணம் இன்றி அவமதித்திருப்பதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சொன்னது ஒரு கருத்தாகவும், படத்தில் அப்படியே நேர்மறையாக பேசியிருப்பது, ரஜினி படம் போன்று இல்லை பல இடங்களில் அவரை டம்மியாக காண்பித்திருப்பது போன்ற காரணங்கள் தான் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்க்க பலரும் விரும்பவில்லை என்று தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ரஜினிகாந்த் மீதான இமேஜ் இந்தப் படத்திற்குப் பிறகு நிறையவே குறைந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
இன்று ஒரே நாளில் 6 வெளியீடுகள்இன்று ஒரே நாளில் 6 வெளியீடுகள் விஸ்வரூபம் 2 ஆகஸ்டு 10-ந் தேதி ரிலீஸ் விஸ்வரூபம் 2 ஆகஸ்டு 10-ந் தேதி ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

sam - Doha,கத்தார்
12 ஜூன், 2018 - 10:01 Report Abuse
sam இனி இமயமலை வீரர் படம் எல்லாம் இப்படி தான் இருக்கும். காசுக்காக மாரடிக்கும் கூத்தாடி தலைவர், இமய மலை சென்று வந்தால், கொஞ்சம் மக்கள் இவர் பேசியதை கொஞ்சம் மறப்பார்கள்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
11 ஜூன், 2018 - 15:48 Report Abuse
Sathish நான் தமிழ்ராக்கர்ஸ் ரசிகன். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை.
Rate this:
pkl - maa,இந்தியா
11 ஜூன், 2018 - 15:06 Report Abuse
 pkl I am sorry that I had to ure this movie of Ranjith. Rajni's fans like me have been totally insulted by this movie. Director appears to be deep state anti national.
Rate this:
11 ஜூன், 2018 - 14:53 Report Abuse
jayaramakrishnan super star brand came because of entertainment movies with more commedy and happy ending. because of kabali and kaala the super star brand has started diminishing. if politics mixed in movies it wont work.
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11 ஜூன், 2018 - 14:27 Report Abuse
Vijay D Ratnam சூப்பர் ஸ்டாரை வைத்து 175 நிமிடங்களுக்கு படம் எடுப்பது என்றால் நிமிடத்துக்கு நிமிடம் தியேட்டரை அதிர விட வேண்டாமா? அன்று கபாலியை மொக்க படம், குப்பை என்று சொன்னவர்களை இன்று கபாலி எவ்வளவோ மேல் என்று சொல்லவைத்துவிட்டார். குசேலன் படத்தையே கொண்டாடிய ரஜினி ரசிகர்களே படம் சுமார் என்று சொல்லவைத்துவிட்டார் பா.ரஞ்சித்.
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in