ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயிஷா. பிரபல இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தார். தற்போது ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் படங்களில் நடித்து வருகிறார். ஷாயிஷா தற்போது இணைய தளத்தில் வைரலாகியிருக்கிறார்.
அடிப்படையில் நடன கலைஞரான சாயிஷா, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா பாடிய "சொடக்கு மேல சொடக்கு போடுது..." பாடலுக்கு சாயிஷா தனது வீட்டுக்குள் சரியான குத்தாட்டம் ஒன்றை போட்டு, அதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த குத்தாட்டம்தான் இப்போது ஆன்லைன் டிரண்டிங். தற்போது தம்பி கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வரும் சாயிஷாவுக்கு அடுத்து அண்ணன் சூர்யாவுடன் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்கான கவன ஈர்ப்புக்குத்தான் இந்த குத்தாட்டம் என்கிறார்கள்.