ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்க்கு வருகிற 22ந் தேதி 47வது பிறந்த நாள். வழக்கமாக விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆடம்பர கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம், அமைதியான வழியில் ஏழை மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள். அதையும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று விஜய் தலைமை ரசிகர் மன்றத்திலிருந்து கிளை மன்றங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பிறந்த நாள் அன்று ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 62வது படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். பிறந்த நாள் அன்று அவர் ஊரில் இல்லை. அதனால் அவரை பார்க்க சென்னை வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து முறையான அறிக்கை விஜய்யிடமிருந்து இன்னும் ஒரு சில நாளில் வெளிவரும் என்று தெரிகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வு காரணமாக மாணவிகள் தற்கோலை, காவிரி பிரச்சினையில் இன்றும் தீர்வு கிடைக்காமல் இருப்பது போன்ற அசாத்தியமான சூழல் நிலவுவதால் விஜய் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க நினைப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் விஜய் பிறந்த நாள் அன்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த டிராஃபிக் ராமசாமி படம் வெளிவருகிறது.