ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் ராமன்அப்துல்லா, குரு பார்வை, சிம்மராசி, விரும்புகிறேன் உள்பட பல படங்களில் கதாநாயகி மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் ஈஸ்வரிராவ். இதில், விரும்புகிறேன் படத்தில் தமிழக அரசின் சிறந்த கேரக்டர் நடிகைக்கான விருது பெற்றார்.
தற்போது பல ஆண்டுகளுக்குப்பிறகு காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார் ஈஸ்வரிராவ். வெகுளியான பெண்ணாக அவர் நடித்துள்ள காட்சிகள் தியேட்டர்களில் பலத்த கைதட்டல் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் வர்மா படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஈஸ்வரிராவ். காலா படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்த டைரக்டர் பாலா, நல்ல அழுத்தமான கேரக்டராகவே கொடுத்துள்ளாராம். அதனால், ஈஸ்வரிராவின் ரீ-என்ட்ரி தமிழில் அமோகமாக இருக்கும் என்று தெரிகிறது.