'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
விஜய் நடிக்கும் 62வது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் நடிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் காட்சிகள் படமாகி வருகிறது. இதற்காக அரசியல் கட்சி கூட்டம் நடப்பது போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சிதலைவர்களை வரவேற்பதற்கு தப் அடித்தபடி சில காட்சிகளை படமாக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போது கிடைத்த ஒரு கேப்பில், தானும் ஒரு தப்பை கையில் வாங்கி அடி பின்னி எடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வீடியோவை தற்போது தனது இணைய பக்கத்திலும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதற்கு விஜய் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.