டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதிவ்யா, மனசார என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். வருத்தப்படாத வாலிபர் சங்கம படத்தின் மூலம் தமிழில், "ஊதா கலரு ரிப்பன்..." பெண்ணாக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார். தொடர்ந்து வெள்ளக்காரதுரை, ஜீவா, காக்கிசட்டை, ஈட்டி, போன்ற படங்கள் அவருக்கு புகழை கொடுத்தது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு நாட்கள், இஞ்சி இடுப்பழகி, பென்சில், காஷ்மோரா, உள்ளிட்ட படங்கள் ஏமாற்றத்தை தந்தன.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்து ஒத்தைக்கு ஒத்த என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அப்பாவியான கிராமத்து பெண் கேரக்டருக்கு அவர் பொருத்தமானவர் என்கிற இமேஜ் உருவானது. இதனால் தனது இமேஜை மாற்ற விரும்பினார் ஸ்ரீதிவ்யா. தற்போது ஒத்தைக்கு ஒத்த படப்பிடிப்பு முடிந்து விட்டதால் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி மாடர்ன் பொண்ணாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஒரு சில படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். இனி நகர்புறத்து மாடர்ன் கேரக்டரிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.