அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நயன்தாரா மாயா படத்தில் நடித்த மாதிரி த்ரிஷா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் மோகினி. விஜய் நடித்த மதுர படத்தை இயக்கிய ஆர்.மாதேஷ் இயக்கி உள்ளார். த்ரிஷாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், யோகி பாபு, சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஹீரோ இல்லை என்றாலும் பிரபல மாடல் ஜாக்கி பெஹ்னானி த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
75 சதகிவித படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. குறிப்பாக லண்டனில் நடந்தது. படப்பிடிப்புகள் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. கடந்த பிப்ரவரி மாதமே வெளிவந்திருக்க வேண்டிய படம் இதுவரை வெளிவரவில்லை. படத்தில் 40 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளது. அதன் பணிகள் முடியவில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டது. அந்த அளவிற்கு படம் வியாபாரமாகாததால் முடங்கி கிடக்கிறது என்றும் கூறப்படுகிறது. படத்தை சிங்கம் 2 படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரிஷா இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.