'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி நடித்த காலா படம் நேற்று உலகமெங்கிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், காலா படத்தில் ஒரு காட்சியில் ரஜினி லுங்கி, பனியன் அணிந்தபடி தோளில் டவல் போட்டு ஒரு சேரில் அமர்ந்திருப்பார். அப்போது அவர் அருகில் ஒரு நாயும் அமர்ந்திருக்கும். அதையடுத்து ரஜினி குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் போட்டோவிலும் அந்த நாய் இடம்பெற்றிருக்கும்.
அந்த நாய்க்கு இப்போது மவுசு கூடி விட்டதாம். ரஜினியுடன் நடித்த நாய் என்பதால் அதை ரூ. 2 கோடிக்கு விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளார்களாம். ஆனால் அதன் உரிமையாளர் ரஜினியுடன் நடித்த நாய் என்பதால் அதை விற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.