பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகி உள்ள காலா படம் உலகம் முழுக்க இன்று(ஜூன் 7) ரிலீஸாகி உள்ளது. அதிகாலையிலேயே படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்தினர். சில ஊர்களில் ரஜினியின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம், கற்பூர ஆராதாணை போன்ற நிகழ்வுகளும் நடந்தன. பல தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
காலா படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்ள சென்னையில் உள்ள சில தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார் இயக்குநர் ரஞ்சித். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காலா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம் இது, ரஜினியின் அரசியலுக்காக காலா படத்தை எடுக்கவில்லை. சில இடங்களில் படம் வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது" என்றார்.