தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செல்வராகவன் இயக்கியுள்ள என்ஜிகே படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 37வது படமான இந்த படம் பத்து நாடுகளில் படமாக்கப்பட உள்ளது.
இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோரும் நடிக்கிற செய்தி ஏற்கனவே வெளியாகி விட்டது.
தற்போது இந்த படத்தில் மோகன்லால் இளமையான கெட்டப்பில் நடிப்பதாக ஒரு புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. முக்கியமாக விஜய்யுடன் நடித்த ஜில்லா படத்தில் அவரது அப்பாவாக நரை முடி கெட்டப்பில் நடித்த மோகன்லால், சூர்யா படத்தில் அதைவிட இளமையானவராக நடிக்கிறாராம்.