கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் சாமி-2. நாயகியாக கீர்த்தி
சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் 2 நிமிட டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. அந்த டீசர்
கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் சாமி-2 டிரைலரை கிண்டல் செய்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதாவது,
முந்தா நாள் வந்த டீசர்ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்ஸயும்
ஒன்னு சேர்த்து ஒரு டிரெய்லர். ஸ்ஸ்ஸப்பா என்று பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து விக்ரமின் ரசிகர்கள் கஸ்தூரியை ஆபாச வார்த்தைகளால் திட்ட, அவரும் தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
அதில்
ஒன்றாக, "சொந்த பொண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான்
வயசுக்கேத்த நடிப்பா? அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான்
பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு" என பதிவிட்டுள்ளார்.
மேலும்,
முந்தாநாள் வந்த டீசர் என்று கஸ்தூரி சொன்னது மிர்ச்சி சிவா நடித்துள்ள
தமிழ்ப்படம் 2.ஓ படத்தின் டீசரைத்தான். அந்த படத்தில் கஸ்தூரி ஒரு
குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.