‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்துள்ள 'காலா' படம் நாளை மறுநாள் ஜுன் 7ம் தேதி, கர்நாடகா, நார்வே, சுவிஸ் ஆகிய இடங்களைத் தவிர உலகம் முழுவதும் வெளியாகிறது. ரஜினிகாந்த்திற்கு ஜப்பான் நாட்டில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடித்து வெளிவந்த 'முத்து' திரைப்படம் அங்கு பெரும் சாதனையைப் படைத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் ஜப்பான் நாட்டிலும் திரையிடப்பட ஆரம்பித்தன.
'காலா' படத்தை தமிழ்நாட்டில் வெளியாகும் அதே தினத்திலேயே ஜப்பான் நாட்டிலும் 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அங்குள்ள டோக்கியோ, எபினா, இச்சிகவா, நகோயா சயா, ஓடா, இபாரகி ஆகிய நகரங்களில் உள்ள தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட காட்சிகள் அங்கு திரையிடப்பட உள்ளன.
'காலா' படம் ஜப்பான் நாட்டில் வெளியாவது குறித்து அங்குள்ள ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் 'காலா'வை வரவேற்று சில வீடியோக்களையும் யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள்.