இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கவுதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், பார்த்திபன், ரிது வர்மா, ராதிகா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கம் படம் 'துருவ நட்சத்திரம்'. நீண்ட காலமாக படத் தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசர் சற்று முன் திடீரென வெளியிடப்பட்டது. இந்த டீசர் இணையதளங்களில் லீக் ஆனதைத் தொடர்ந்து டீசரை திடீரென வெளியிட்டுவிட்டார்கள்.
சில தினங்களுக்கு முன்புதான் விக்ரம் நடிக்கும் மற்றொரு படமான 'சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியானது. அந்த டிரைலருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த மாஸ் படத்திற்கு போட்டியாக கிளாஸ் படமான 'துருவ நட்சத்திரம்' டீசரை வெளியிட்டு விக்ரம் இமேஜை சரிக்கட்டியிருக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாகத் தயாரிப்பில் இருக்கும் இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு டீசரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதன் பின் ஒரு வருடத்திற்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு டீசர்களை வெளியிட்டார்கள். இப்போது மூன்றாவதாக ஒரு புதிய டீசரை வெளியிட்டுள்ளார்கள்.