இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரளாவைச் சேர்ந்த அஜ்மல், பிப்ரவரி 14 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனார். அதன்பிறகு அவர் நடித்த அஞ்சாதே படம் அவருக்கு கவனத்தை பெற்றுக் கொடுத்தது. டி.என்.ஏல் 4777, திருதிரு துறுதுறு, வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு ஹீரோ வாய்ப்புகள் குறைந்து விடவே கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். சமீபத்தில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலும் வில்லனாக நடித்தார்.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாராகும், வியூகம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ், அனுயா நடித்துள்ளனர். இவர்கள் தவிர விஷ்ணு கவுதம், சேரன்ராஜ், ஆர்த்தி, சரண்யா, தீபக், உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.வி.எண்டர்டெயினர்ஸ் சார்பில் தண்டபாணி தயாரித்துள்ளார், தீபக் நிலாம்பூர் இசை அமைத்துள்ளார், சந்தோஷ்மேனன் இயக்கி உள்ளார்.