தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியிருக்கிறார் ஜூலி. அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கை படத்தில் நடிப்பவர், அடுத்தப்படியாக அம்மன் தாயி என்ற பக்தி படத்தில் நடிக்கிறார்.
புதியவர் அன்பு ஹீரோவாக அறிமுகமாகிறார். சரண் என்ற புதுமுகம் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். ஜூலி, அம்மன் தெய்வமாக நடிக்கிறார். இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் - சந்திரஹாசன் இயக்கி தயாரிக்கின்றனர்.
அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார் ? என்பதே படத்தின் ஒரு வரிக்கதை.
அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக எப்படி விரதமிருப்பது? எப்படி தெய்வங்களை வழிபடுவது? இந்துக்களின் சாங்கிய, சம்பிரதாயங்கள் என்னென்ன? என அத்தனையையும் தெரிந்து கொண்டார். அம்மன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் ஒரு இந்துவாகவே மாறி முறைப்படி விரதங்கள் இருந்து காட்சிகளில் நடித்துக் கொடுத்தார் என்கிறார்கள் இயக்குநர்கள்.
விரைவில் படத்தின் ஆடியோ வெளியாக உள்ள நிலையில் படத்தை அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.