ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'என்ஜிகே' என்பதற்கு இப்போது ஓரளவிற்கு அர்த்தம் தெரிந்துவிட்டது. டிஎம்கே, எடிஎம்கே, பிஎம்கே, டிஎம்டிகே போல 'என்ஜிகே' என்பதும் ஒரு அரசியல் கட்சியின் சுருக்க எழுத்தாக இருக்கலாம். 'என்' என்பதற்கு 'நேஷனல்' என்று எடுத்துக் கொள்ளலாம், 'கே' என்பதற்கு 'கட்சி' என்று எடுத்துக் கொள்ளலாம், 'ஜி' என்பது அனேகமாக படத்தில் சூர்யா ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயராக இருக்கலாம், அல்லது அவர் சார்ந்து கட்சித் தலைவரின் பெயராக இருக்கலாம்.
இன்று இப்படத்தின் சில படப்பிடிப்புப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் கரை வேட்டியுடன் சூர்யாவும், கைத்தறிப் புடவையில் சாய் பல்லவியும் உள்ளனர். ஒரு மாநாட்டிலோ, அல்லது கட்சிக் கூட்டத்திலோ இருவரும் கலந்து கொள்வது போன்ற காட்சிகளின் புகைப்படங்களாக அவை இருக்கலாம். சூர்யாவின் சட்டையில் அதன் 'பேட்ஜ்'ம் இடம் பெற்றுள்ளது.
'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற அரசியல் வசனங்கள் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றன. விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படமும் அரசியல் படம்தான். இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'என்ஜிகே' படமும் ஒரு அரசியல் படம் எனத் தெரிய வந்துள்ளது.