பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருப்பவர் ஈஸ்வரிராவ். இவர் ஏற்கனவே கவிதை பாடும் அலைகள், நாளைய தீர்ப்பு, ராமன் அப்துல்லா, குருபார்வை, சிம்மராசி, விரும்புகிறேன் என பல படங்களில் நடித்துள்ளார். இதில் விரும்புகிறேன் படத்திற்காக சிறந்த குணசித்ர நடிகைக்கான தமிழக அரசு விருது பெற்றார்.
இந்நிலையில், 2006ல் சிம்பு நடித்த சரவணா படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவி வேடத்தில் நடித்த ஈஸ்வரிராவ் அதன்பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் இப்போது ரஜினிக்கே ஜோடியாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி சாருடன் நடிப்பேன் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை. அதுவும் ரஜினிக்கு ஜோடியாக என்னை நடிக்க வைப்பதை சொல்லாமலேயே காலா படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் ரஞ்சித். ஸ்பாட்டுக்கு சென்ற பிறகுதான் அந்த விசயமே எனக்கு தெரிந்தது. இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்போது ரஜினி சாருடன் நடித்து விட்டேன். நான் நினைத்தே பார்க்காத ஒரு பெரிய விசயம் நடந்திருப்பதை நினைக்கையில் ரொம்ப சந்தோசமாக உள்ளது என்கிறார் ஈஸ்வரிராவ்.