வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய இணையதள வெப் டிவியாக மாறி இருக்கிறது யப் டிவி. இந்த இணையதளம் 20க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகளையும், 2000க்கும் மேற்பட்ட படங்களையும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தற்போது பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஏஎல்டி பாலாஜி உடன் கை கோர்த்துள்ளது. இதன்மூலம் ஏஎல்டி பாலாஜி வெப் இணையதளத்தின் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை யப் டிவியில் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏஎல்டி பாலாஜி வெப் இணையதளத்தில் ஓராண்டுக்குள் ரொமான்ட்டிக், காமெடி, புதிர் போன்ற 20க்கும் மேற்பட்ட பல நிகழ்ச்சிகளை உருவாக்கி உள்ளது. இதை உலகம் முழுக்க 90 நாடுகளில் பார்க்க முடியும். மேலும் ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடிகளையும் வழங்கி வருகிறது.