ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது கொரில்லா படத்தில் நடித்து வரும் ஜீவா. அடுத்து நடிக்க இருக்கும் படம் ஜிப்ஸி. இதனை குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்குகிறார். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
இது இந்தியா முழுக்க பயணிக்கிற ஒரு பயணக் கதை. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் படமாக்கப்படுகிறது. இதில் ஜீவா ஜோடியாக நடிக்க பிரபல மாடல் அழகி நடாஷா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மிஸ்.இமாச்சல் பிரதேசம், மிஸ் பெமினா பட்டம் வென்ற நடாஷா சிங் அதன் பிறகு மாடலிங் துறையில் முன்னணியில் இருக்கிறார். பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இந்தி டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் ஜிப்ஸி மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகிறார்.